பாடம் 9

மே 21-27

ஏமாற்றி இடம்பிடித்த யாக்கோபு

  • யாக்கோபு ஆசீர்வாதங்களை திருடிக்கொண்டார்.
    • ஏசாவும் யாக்கோபும் ஒரே நாளில் பிறந்தவர்கள், ஆனால் அவர்கள் குணம் வெவ்வேறானது. ஏசா ஒரு சுறுசுறுப்பான வேட்டைக்காரர், ஆனால் யாக்கோபு ஒரு அமைதியான மேய்ப்பர் (ஆதி. 25:27).
    • ஏசா இன்றைக்குள்ள காரியத்தை மாத்திரம் பார்ப்பவர், ஆனால் யாக்கோபு அதையும் தாண்டி யோசிப்பவர். யாக்கோபு சேஷ்டப்புத்திரபாகத்தையும் ஆசீர்வாதத்தையும் விரும்புகிறவர் (உ.தா. வாக்குத்தத்த வித்திற்கு தொடக்கமாக இருக்க விரும்பினார்).
    • யாக்கோபு தன் சகோதரன் அலட்சியம் செய்த சேஷ்டபுத்திரபாகத்தை பெற்றுக்கொண்டார்(ஆதி. 25:29-34).
    • ஈசாக்கு ஏசாவை ஆசீர்வதிக்க விரும்பிய போது, யாக்கோபு தன் தகப்பனை ஏமாற்றி, ஆசீர்வாதங்களை மோசடி செய்து பெற்றுக்கொண்டார் (ஆதி. 27:1-27).
  • தேவன் யாக்கோபை ஆசீர்வதிக்கிறார் – 1
    • யாக்கோபினால் ஏமாற்றப்பட்டபின்பு, ஏசா தன் தகப்பனுடைய மறைவிற்கு பின் தன் சகோதரனை கொலை செய்வதாக தீர்மானம் பண்ணிக்கொண்டான் (ஆதி. 27:41). யாக்கோபை தூர தேசத்தில் இருக்கிற தன் சொந்தங்களிடம் சென்று பெண் கொள்ள கூறும்படி ஈசாக்கிடம் ரெபெக்காள் கூறினாள் (ஆதி. 27:42-28:5).
    • இந்த பயணத்தில் யாக்கோபை தேவன் ஆசீர்வதித்தார். பரலோகத்தில் இருந்து வைக்கப்பட்ட ஒரு ஏணியின் மேலிருந்து தன்னை யாக்கோபுக்கு அறிமுகப்படுத்தினார் தேவன் (ஆதி. 28:11-15; ஆதி. 11:4). யாக்கோபு தன்னுடைய முயற்சியினால் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முயன்றார், ஆனால் தேவனால் மட்டுமே ஆசீர்வாதங்களை தரமுடியும்.
    • தேவனுடைய ஆசீர்வாதத்திற்கு பதிலுணர்வாக இரண்டு (ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமானது) பொருத்தனைகளை யாக்கோபு செய்தார்: அந்த இடத்தை தேவனுடைய வீடாக்கவும், தனக்கு கிடைக்கும் எல்லாவற்றிலும் தசமபாகம் வைக்கவும் பொருத்தனை செய்தார் (ஆதி. 28:22).
  • யாக்கோபு ஏமாற்றப்பட்டார்.
    • “யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு.” (ஆதி 29:18) ராகேலுக்காக லாபானுக்கு வரதட்சனை கொடுப்பதற்கு யாக்கோபிடம் ஒன்றுமில்லை, ஆகவே ராகேலை திருமணம் செய்வதற்காக லாபானிடம் 7 வருடம் வேலை செய்தார் யாக்கோபு.
    • என்றாலும், லாபான் தன் மருமகனை ஏமாற்றி தன் மகள் லேயாளை ராகேலுக்கு பதிலாக திருமணம் செய்து வைத்தார் லாபான் (ஆதி. 29:20-23).
    • அடுத்த நாள் காலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் யாக்கோபு. பதிலுக்கு பதில் என்ற தாலியனின் சட்டப்படி பாடுப்பட்டார் யாக்கோபு(யாத.; 21:24). இப்போது அவர் தன் பாவத்தை உணர்ந்து, தன் தகப்பன் மற்றும்
  • தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார் – 2
    • பின்வரும் காலங்களில் தேவன் யாக்கோபை இவ்வாறு ஆசீர்வதித்தார். அவருக்கு 11 மகன்கள் பிறந்தனர் (பென்யமின், 12வது மகன், பின்பதாக பிறந்தார்).
    • பிள்ளைகளுடைய பெயர்கள் லேயாள் மற்றும் ராகேலின் உணர்வுகளை வெளிப்படுத்தியது. அவர்களுடைய பிரச்சனை ஒரு புறமிருந்தாலும், தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி. 29:31-30:24).
  • யாக்கோபு ஆசீர்வாதாமாக இருந்தார்.
    • லாபான் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு யாக்கோபு ஆசீர்வாதமாக இருந்தார். என்றாலும், யாக்கோபிடம் ஒன்றுமில்லை. இப்போது அவர் அவருக்காகவும் அவருடைய குடும்பத்திற்காகவும் உழைக்க வேண்டும்.
    • லாபான் தன் மருமகனை மீண்டும் ஏமாற்ற நினைத்தார், ஆனால் தேவன் அதை அனுமதிக்கவில்லை (ஆதி. 31:7). அதற்கு முரணாக, தேவன் சொப்பனங்கள் மூலமாக யாக்கோபோடு பேசி லாபானுடைய தந்திரங்களை முறியடிக்க மரபியலை (அதைக் குறித்து அவருக்கு தெரியாது) பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார் (ஆதி. 31:9-13).
    • யாக்கோபு தர்க்கம் பண்ணவில்லை, போராடவில்லை, தானே எந்த முடிவும் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் தேவனுக்காக காத்திருந்தார். தேவன் அவரிடம் கானானுக்கு போ என்று சொல்லும் போதுதான் அவர் லாபானுடைய வீட்டைவிட்டு வெளியேறினார் (ஆதி 31:3).

Resource Credit: fustero.es (பவர்பாயிண்ட் மொழிப்பெயர்த்தவர்: ஜேம்ஸ் அலெக்சாண்டர் செல்வராஜ்)