பாடம் 11

ஜூன் 4-10

கனவு நீபுணன் யோசேப்பு

 • யோசேப்பின் சொப்பனங்கள். ஆதியாகமம் 37:1-11.
  • தன் சகோதரர்களின் தவறான காரியங்களெல்லாம் தன் தகப்பனிடம் அறிவித்துக்கொண்டிருந்தான் யோசேப்பு (ஆதி. 37:2). அதனால் யாக்கோபு தன் குமாரர்கள் மத்தியில் யோசேப்பை—ராகேலின் மூத்த மகனை— மேலாக வைக்க நினைத்தார் (ஆதி. 37:3).
  • அந்த சொப்பனங்களினால் யாக்கோபு மகிழ்ச்சியாக இல்லை, ஆனால் அதன் அர்த்தத்தையும் அதன் எதிர்கால நிறைவேறுதலையும் பிரதிபலித்தார் யாக்கோபு (ஆதி. 37:11).
 • யோசேப்பு விற்கப்பட்டான். ஆதியாகமம் 37: 12-36.
  • எல்லாமே வேகமாக நடந்து முடிந்தது (ஆதியாகமம் 37:13-36).
   • யாக்கோபு யோசேப்பை தன் சகோதரர்களை சந்திக்கும்படி அனுப்புகிறார் (13-14).
   • “யதார்த்தமாக” ஒரு மனிதன் யோசேப்பை சந்தித்து அவன் சகோதரர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அவனுக்கு தெரிவித்தான் (15-17)
   • யோசேப்பை அவன் சகோதரர்கள் கண்டபோது அவனை கொலை செய்யும்படி தீர்மானித்தனர் (18-20)
   • யோசேப்பை காக்கும்படி ரூபன் அவனுக்கு பதிலாக மன்றாடினான் (21-24)
   • யூதா ஒரு புது திட்டத்தை முன்மொழிந்தான்: யோசேப்பை கொலை செய்வதற்கு பதிலாக அவனை விற்றுவிடுவது (25-28)
   • யோசேப்பு மரித்துவிட்டதாக யாக்கோபிடம் கூறி அவரை ஏமாற்றினார்கள் (29-35)
   • எகிப்திலே யோசேப்பு, போத்திபாரிடத்தில் விற்கப்பட்டான் (36)
 • இடைசெருகல்: யூதாவும் தாமாரும். ஆதியாகமம் 38
  • யேசேப்பு விற்கப்பட்டப்பின், யூதா அந்த கூட்டைவிட்டு பிரிந்தான். அவர் திருமணம் முடித்து 3 பிள்ளைகளை பெற்றார் (ஆதி. 38:1-5). ஏர் முதற் பிறந்தவன், தாமாரை திருமணம் செய்தான். பின்பு, தேவன் யூதாவின் பிள்ளைகளுடைய தீமையான செயல்களுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார் (ஆதி. 38:6-10).
  • என்றாலும், தேவன் யூதாவையும் தாமாரையும் அவர்கள் தவறுக்காக அவர்களை தண்டிக்கவில்லை (ஆதி. 38:11-18). யூதா தன் தவறை அறிக்கையிட்டார், தாமார் நீதியுள்ளவளாக எண்ணப்பட்டாள் (ஆதி. 38:26). தேவன் தீமையை நன்மையாக மாற்றினார், தம்முடைய கிருபையினாலே தாமாரையும் மீட்டார்.
 • யோசேப்பு சிறைபடுத்தப்பட்டார். ஆதியாகமம் 39
  • தனக்குள்ள எல்லாவற்றிக்கும் யோசேப்பை அதிகாரியாக்கினான். வெற்றி யோசேப்பின் மனதை மாற்றவில்லை. அதற்கு முரணாக, தன் எஜமானியின் உள்ளான ஆசைகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார் (ஆதி. 39:9). என்றாலும், அவர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் தொடக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
  • தேவன் அந்த சிறைச்சாலையிலும் யோசேப்போடே இருந்தார். சிறைச்சாலைக்காரன் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்து, தேவன் தம்முடைய கிருபையை யோசேப்புக்கு அதிகமாக்கினார் (ஆதி. 39:21).
  • மீண்டுமாய் அவரை எல்லாவற்றிக்கும் அதிகாரியாக்கினார் (ஆதி. 39:22-23). தன்னுடைய வெற்றி தேவனுடையது என்பதை யோசேப்பு ஒருபோதும் மறந்துபோகவில்லை. யோசேப்பு எல்லா சூழ்நிலையிலும் தேவனிடத்தில் உண்மையுள்ளவராயிருந்தார்.
 • பார்வோனின் சொப்பனங்கள். ஆதியாகமம் 40:1-41:36
  • பானப்பத்திரக்காரன் மற்றும் சுயம்பாகிகளின் தலைவன் அவர்களின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொன்னவுடன் தான் விடுவிக்கப்படுவேன் என்று யோசேப்பு எதிர்ப்பார்த்தார் (ஆதி. 40:14-15). ஆனால் அவருக்கு உடனே விடுதலை கிடைக்கவில்லை.
  • பின்பு, இரண்டு சொப்பனங்கள் மற்றும் அதை கண்ட கலங்கின சொப்பனக்கரானும் வந்தார். அந்த சொப்பனங்களின் அர்த்தத்தை அறிந்துகொள்ள பார்வோன் மிகவும் ஆர்வமாயிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், தேவனுடைய நேரம் இறுதியாக வந்தது (ஆதி. 41:1-14).
  • பார்வோனுக்கு முன்பாக கூட, யோசேப்பு தன்னுடைய வெற்றியை தன்னுடையது என்று நினைக்கவில்லை, அதை தேவனுடைய என்றே எண்ணினார்: “அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான்.” (ஆதி. 41:16)
  • யோசேப்பின் இரண்டு சொப்பனங்களும் நிறைவேற ஆரம்பித்தது. பல ஆண்டுகளுக்கு பின்பு, எகிப்து முழுவதற்கும் யோசேப்பு அதிபதியாக்கப்பட்டார் (ஆதி. 41:41).

Resource Credit: fustero.es (பவர்பாயிண்ட் மொழிப்பெயர்த்தவர்: ஜேம்ஸ் அலெக்சாண்டர் செல்வராஜ்)