பாடம் 10

மே 28-ஜூன் 3

யாக்கோபு - இஸ்வேல்

  • யாக்கோபு மன்னிக்கப்பட்டார் => இஸ்ரவேல்:
    • தேவனுடைய மன்னிப்பு. ஆதி.
      • ஏசா யாக்கோபை கொலை செய்வதாக தீர்மானம் பண்ணியிருந்தார் (ஆதி. 27:41). யாக்கோபு அவரோடு ஒப்புரவாக வேண்டுமென்றிருந்தார், ஆனால் ஏசா 400 மனிதரோடு வருகிறார். யாக்கோபு ஜெபித்து தேவனுடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொண்டார் (ஆதி. 32:9-12).
      • யாக்கோபால் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை, அகவே அவர் தேவனிடத்தில் மன்னிப்பை கேட்டு ஜெபித்தார். அவருடைய ஆவிக்குரிய போராட்டம் சரீர போராட்டமாக மாறியது (ஆதி. 32:13-24).
      • இறுதியாக, யாக்கோபு அந்த “மனிதனை” பிடித்துக்கொண்டார், ஏனென்றால் அவர் தேவன் என்பதை உணர்ந்திருந்தார் (ஆதி. 32:30). தன்னை ஆசீர்வதிக்கும்படி யாக்கோபு தேவனிடத்தில் கேட்டார் (ஆதி. 32:26). தேவன் உறுதியளித்தார், “தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே” (ஆதி. 32:28).
    • மனித மன்னிப்பு. ஆதி.
      • யாக்கோபு தன் சகோதரனுக்கு சில பரிசுகளை அனுப்பினார். தானும் தன் சகோதரன் முன் 7விசை வணங்கினார் (ஆதி 33:1-3). தன் தகப்பனின் ஆசீர்வாதங்களின் நிறைவேறுதலை தான் கோரப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்பினார் யாக்கோபு(ஆதி. 27:29).
      • ஏசாவுடைய உணர்வுகள் யாக்கோபை அதிர்ச்சியடைய செய்தது. அவருடைய சகோதரன் அவரை மன்னித்துவிட்டார்! (ஆதி. 33:4).
      • யாக்கோபு புதுமனிதனாக மாறினார், இஸ்ரவேல். அவர் தேவனாலும் மனிதனாலும் மன்னிக்கப்பட்டார். அதற்கு தான் தகுதியில்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். இது தான் கிருபை.
  • குடும்ப பிரச்சனைகள்:
    • வன்முறை வன்முறையை பிறப்பிக்கும். ஆதி.
      • இறுதியாக இஸ்ரவேல் சமாதானத்துடன் வாழ்ந்துவந்தார். கானானில் அவர் சிறு இடம் வாங்கி அதில் பலிபீடம் கட்டி தேவனை தொழுதுகொண்டார் (ஆதி. 33:18-20).
      • சுமாதானம் சீக்கிரமாக மறைந்தது. சீகேம் யாக்கோபின் மகள் தீனாளை கற்பழித்தான். என்றாலும், அவன் அவளை திருமணம் செய்ய விரும்பினான் (ஆதி. 34:1-4, 8).
      • சிமியோனும் லேவியும் எல்லாம் தேவனுடைய சித்தப்படி தான் நடக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனாலும், அவர்கள் மறுதலித்தனர், கொலை செய்தனர், கொள்ளையடித்தனர் (ஆதி. 34:13-17, 25-29).
      • வெளிப்படையாக, தேவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இந்த குடும்பம் தன்னோடு ஒரு புதிய உறவை வைத்துக் கொள்ளும்படி விரும்பினார்.
    • விக்கிரகங்களை கைவிடுதல். ஆதி. 35:1-15.
      • யாக்கோபோடு தன்னுடைய உடன்படிக்கையை தேவன் புதுப்பிக்க விரும்பினார். இந்த முறை அவருடைய முழுக்குடும்பமும் உள்ளடக்கி இருந்தது (ஆதி. 35:3).
      • தன் குடும்பம் தேவனிடத்தில் நெருங்கி ஜீவிக்கவேண்டும் என்று யாக்கோபு விரும்பினார். தங்களிடத்தில் உள்ள எல்லா விக்கிரகங்களையும் தங்களை விட்டு அகற்றும்படி கேட்டுகொண்டார். அவர்கள் ஒத்துழைப்பு ஒருமனதாக இருந்தது (ஆதி. 35:4).
      • தேவன் அவர்களை பாதுகாத்தார் (ஆதி. 35:5-6). தேவன் தன்னை முதன்முதலாக சந்தித்த இடத்தில் ஞாபகமாக ஒரு பலிபீடத்தை கட்டினார் யாக்கோபு (ஆதி. 35:7).
      • யாக்கோபு-இஸ்ரவேல் அவருக்கு தேவனுடைய ஆசீர்வாதம் எதை உள்ளடக்கியது (ஆதி. 35:11-12)?
        1. கனி கொடுப்பவராகவும் மேசியாவின் வித்தை சுமந்து செல்பவராகவும்(v. 11)
        2. வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரிப்பவர் (v. 12)
    • ராகேலின் மரணம். ஆதி. 35:16-29.
      • தன்னுடைய நெருங்கியவர்களின் மரணத்தை யாக்கோபு சந்திக்க நேர்ந்தது. தன் இல்லத்திற்கு திரும்புவதற்கு முன் யாக்கோபு தன் தாய் ரெபேக்காளை இழந்தார். தெபோராள், ரெபேக்காளின் தாதி, பெத்தேலிலே மரித்தாள் (ஆதி. 35:8).
      • ராகேல் தன்னுடைய கடைசி மகன், பெனானி (“என் வருத்தத்தின் மகன்”), பெற்றெடுக்கும் போது பெத்லேகேமுக்கு போகும் வழியில் மரித்தாள். யாக்கோபு அவனுக்கு “பென்யமீன்”, “வலது கரத்தின் மகன்” என்று பேரிட்டான் (ஆதி. 35:16-18).
      • அதன் பின்பு, ரூபன் தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு சயனித்ததன் மூலம் தன் தகப்பன் யாக்கோபை கனவீனப்படுத்தினான் (ஆதி. 35:22). இஸ்ரவேல் அமைதியாயிருந்தான், பின் இதினிமித்தமாக ரூபனுடைய சேஷ்டபுத்திரபாகத்தை அவனிடத்திலிருந்து எடுத்துப்போட்டான் (ஆதி. 49:3-4).
      • இஸ்ரவேலும் அவனுடைய குடும்பமும் பூரணமானவர்களாக இல்லை. என்றாலும், அவர்கள் பூரணமில்லாதவர்களாய் இருந்தாலும், தேவன் தாம் நிறைவேற்ற வேண்டிய திட்டத்தை அவர்கள் மூலம் நிறைவேற்றுகிறார்.

Resource Credit: fustero.es (பவர்பாயிண்ட் மொழிப்பெயர்த்தவர்: ஜேம்ஸ் அலெக்சாண்டர் செல்வராஜ்)