எஜமான் வரும்வரை அவருக்காக நிர்வாகம்செய்தல்

ஜனவரி | பிப்ரவரி | மார்ச் 2023

பாடம் 11

மார்ச் 11-மார்ச் 17

கடினமான காலங்களில் நிர்வாகம்

  • கடினமான காலங்களில் யார் நமக்காக நிற்பார்?
    • யோசபாத் இராஜா யுத்தத்துக்கு தயாராக இருந்தார் (2நாளா. 17:2, 12-13). என்றாலும், அவர் தம்முடைய வரம்புகளை அறிவார். தன்னை அச்சுறுத்தக்கூடிய கூட்டணியை அவரால் சமாளிக்க முடியவில்லை (2நாளா. 20:1-2).
    • அவர் தன் நெருக்கடியை சமாளிக்க மற்ற மனிதர்களிடம் போக அவருக்கு விருப்பமில்லை, ஆனால் அந்த நெருக்கடியில் தனக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஒருவரிடம்; சென்றார்: தேவன் (2நாளா 20:3-12).
    • பயத்தினாலோ பாதுகாப்புமின்மையினாலோ இந்த முடிவு எட்டப்படவில்லை. யோசபாத் தேவனை தொழுதுகொள்வது வழக்கம் (2நாளா. 17:3-4; 19:4).
    • தேவனை மாத்திரமே நம்பமுடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். நெருக்கடியின் காலங்களில் தேவன் மாத்திரமே உதவி செய்ய முடியும் என்று நம்பக்கூடிய அனுதின அனுபவங்களை நீங்களும் பெற்றிருக்கிறீர்களா?
  • யாரை நாம் நம்புவது?
    • தன்னை எந்த மனிதனாலும் காப்பாற்ற முடியாது என்பதை தாவீது அறிந்திருந்தார் (சங். 146:3). அவர் யோனத்தானின் அனுபவம் மூலமாக எதிரிகளை மேற்கொள்ள தேவனுக்கு வல்லமையான சேனை தேவையில்லை என்பதை அறிந்துகொண்டார் (1சாமு. 14:6, 13. 23).
    • என்றாலும், அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டு அவர் தனக்கு எத்தனை படைவீரர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார் (1நாளா. 21:1-2). அது தடை செய்யபடவில்லை, ஆனால் தாவீது தேவனை காட்டிலும் தன் சேனை பலத்தை நம்புவதாக இது வெளிப்படுத்துகிறது.
    • தேவன் எல்லா பொருள்களையும் விட மேலானவர். ஆகவே மனித வளங்களை நாடுவதற்கு முன்பாக நாம் தேவனை தேடும்படி அவர் விரும்புகிறார்.
  • எதை நாம் வைத்துக்கொள்வது?
    • கடைசி உபத்திரவ காலங்களில் நம்மால் வாங்கவோ விற்கவோ முடியாது. நம் கைகளில் ஏதாவது வைத்திருந்தோமானால் அவைகளும் அக்கினியினால் அழிக்கப்படும்(2பே. 3:10-11).
    • ஆகவே நம்மால் வைத்திருக்கமுடியாத காரணத்தால் நாம் நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் விட்டு விட வேண்டுமா?
    • இல்லை, பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் தெளிவாக பேசும்வரை காத்திருக்க வேண்டும். இயேசு மீண்டும் வரும்வரை நம்மிடம் உள்ள எல்லாவற்றுக்கும் நாம் உக்கிராணக்காரர்களாக இருக்கிறோம். ஆகவே நாம் அவைகளை ஞானத்தோடும் உண்மையோடும் நிர்வாகம் பண்ண வேண்டும்.
    • இருந்தாலும், நாம் வாங்கி குவிக்கும் எல்லாம் கொஞ்ச காலந்தான், பின்பு அது பறந்துவிடும்; என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; ஆனால் நாம் கவனமாக இருக்கவில்லையென்றால் ஆவிக்குரிய வாழ்வில் சிதைந்துவிடுவோம்.
  • நம்முடைய முன்னுரிமைகள் என்ன?
    • ஒரு தருணத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும்: நம் சொத்துக்களை இழந்து தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும், அல்லது அவைகளை வைத்துக்கொண்டு, ஊழியம் செய்ய தகுதியியல்லாதவைகளுக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
    • அத்தருணத்தில் நாம் எடுக்கக்கூடிய முடிவை சார்ந்துதான் இன்று வரை நாம் எடுக்கும் முடிவுகள் அமையும் (மத். 6:24).
    • அப்போஸ்தலர் யோவான் கூறுகிறார், “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்ளூ” (1யோ. 2:15).
    • உலகிலுள்ள கெட்ட காரியங்கள் நம்மை தேவனிடமிருந்து பிரித்துவிடும் (1யோ. 2:16)?
  • இந்த கடினமான காலங்களுக்கு நாம் எப்படி ஆயத்தமாவது?
    • இந்த உலகத்தை ஆட்சி செய்கிற வல்லமைகளுக்கு கீழ்படியாமல் தேவனுக்கு உண்மையாயிருக்க விரும்பினால், நாம் நம்முடைய வேலைகளையும் நம் சொத்துக்களையும் இழந்துவிடுவோம் (வெளி. 13:14-17). என்றாலும், தேவன் நம்மை பார்த்துக்கொள்வார் என்பது நிச்சயம் (2தெச. 3:3; சங். 34:19).
    • அந்த தருணங்களுக்கு நாம் எவ்வாறு ஆயத்தமாகிறோம்?
    • தேவனை நம்பவும், இன்று தேவனை சார்ந்து இருக்கவும் கற்றுக்கொள்வோம். ஒரு நல்ல சோதனை என்னவென்றால் தசமபாகத்தில் உண்மையாக இருக்கவேண்டும். சிறியவைகளில் நாம் விழுந்துவிட்டோமானால், வரக்கூடிய நெருக்கடியான காலங்களில் நாம் எப்படி உண்மையாயிருப்போம் (எரே. 12:5)?

Resource Credit: fustero.es

மொழிப்பெயர்த்தவர்‌ : ஜேம்ஸ்‌ அலெக்சாண்டர்‌ செல்வராஜ்‌