பாடம் 6

(ஜனவரி 29 - பெப்ரவரி 4)

உண்மையுள்ள ஆசாரியர் இயேசு

இவ்வார ஆராய்ச்சிர்க்கு: எபி 5:1-10; ஆதி 14:18-20; 1பேதுரு 2:9; எபி 7:1-3; எபி 7:11-16, எபி 7:22,26.

மனன வசனம்: “பரிசுத்தரும்‌ குற்றமற்றவரும்‌, மாசில்லாதவரும்‌, பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும்‌ உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்’. எபிரெயர்‌ 7:26.

பாவம்தான்‌ நமக்கும்‌ தேவனுக்கும்‌ இடையே பிளவை உண்டாக்கியது. பாவம்‌ நம்‌ இயல்பையும்‌ கெடுக்கிறது: அதனால்‌ பாவப்பிரச்சனை மேலும்‌ சிக்கலாகியது. தேவன்‌ பரிசுத்தர்‌: அவர்‌ பிரசன்னத்தில்‌ பாவம்‌ இருக்க முடியாது: அதனால்‌ கெட்டுப்போன நம்‌ இயல்புதான்‌, தேவனிடமிருந்து நம்மைப்‌ பிரிக்கிறது. மேலும்‌, கெட்டுப்போன நம்‌ இயல்பு, தேவபிரமாணத்திற்குக்‌ கீழ்ப்படிய முடியாமல்‌ செய்கிறது. பாவம்‌ நம்‌ தேவனை நாம்‌ தவறாகப்‌ புரிந்துகொள்ளுமாறு நம்மை மாற்றுகிறது.

‘தேவன்‌ அன்புள்ளவர்‌, இரக்கமுள்ளவர்‌’ என்பதை மனிதர்கள்‌ மறந்து, கோபமும்‌ கடுமையும்‌ நிறைந்தவராக அவரரப்‌ பார்க்க ஆரம்பித்தார்கள்‌.

அந்தப்‌ பிளவைச் சரிசெய்ய பிதாவும்‌ குமாரனும்‌ செய்த மகத்துவங்களை இந்தவாரம்‌ஆராய்வோம்‌. இயேசுவின்‌ ஆசாரியத்துவம் குறித்த நுணுக்கங்களை எபி 5-7 ம ன்வைக்கிறது. அதன்‌ தோற்றம்‌, நோக்கம்பற்றி ஆசிரியர்‌ அலசுகிறார்‌. எபி 5:1-10. பிறகு அதில்‌ அலட்சியம்‌ வேண்டாமென விசுவாசிகளை எச்சரிக்கிறார்‌. எபி 5:11-6:8.

மாறாக, அதனால்‌ கிடைத்துள்ள நம்பிக்கையை உறுதியாகப்‌ பற்றிக்‌கொள்ளச்‌ சொல்லுகிறார்‌. எபி 6:9-20. இயேசுவினுடைய ஆசாரியத்‌துவத்தின்‌ தன்மைகளை விளக்குகிறார்‌. எபி 7:1-10. அதனால்‌ விசுவாசிகளுடன்‌ தேவனுக்கு ஏற்பட்டுள்ள உறவுகளையும்‌ விளக்குகிறார்‌. எபி 7:11-28. குறிப்பாக எபி 5:1-10; எபி 7:1-28 வசனங்கள்பற்றி இந்த வாரத்தில்‌ ஆராய்ச்சி செய்வோம்‌.

2021, பெப்ரவரி 5 வகுப்புக்காகம்‌ படிக்கவேண்டிய பாடம்.

மனிதர்களுக்கான ஆசாரியர்‌

ஆசாரியத்துவத்தின் பணி என்ன? அந்தப்‌ பணியை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்? எபி 5:1-10.

லேவி கோத்திர ஆசாரியத்துவத்தின்‌ அடிப்படை நோக்கம்‌, பாவமனிதர்‌களுக்கும்‌ தேவனுக்கும்‌ இடையே மத்தியஸ்தம்‌ செய்வதாகும்‌. மனிதர்களுக்காக ஊழியம்செய்ய ஆசாரியர்களை தேவன்‌ நியமித்தார்‌. அதனால்‌ அவர்கள்‌ இரக்கமூள்ளவர்களாக, மனிதர்களின்‌ பெலவீனங்களைப்‌ புரிந்துகொள்கிறவர்களாக இருக்க வேண்டியதிருந்தது.

இயேசு அந்த  நோக்கங்களை கச்சிதமாக நிறைவேற்றுவதாக பவுல்‌ சொல்‌கிறான்‌. எபி 5:1-10. தேவன்‌ அவரை நியமித்தார்‌. எபி 5:5,6. இயேசு தாமும்‌ அடைந்த பாடுகளினால்‌ நம்மைப்‌ புரிந்துகொள்கிறார்‌. எபி 5:7,8.

ஆனால் சில முக்கிய வித்தியாசங்களும்‌ உள்ளன. இயேசு  ‘மனுஷரில்‌’ தேரிந்து கொள்ளப்படவில்லை. எபி 5:1. மாறாக, நமக்காகப்‌ பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றவும்‌, குறிப்பாக ஆசாசியராகப்‌ பணியாற்றவும்‌ மனிதராக அவதரித்‌தார்‌. இயேசு தம்முடைய பாவங்களுக்காகப்‌ பலிசெலுத்தவில்லை; நம்‌ பாவங்‌களுக்காகப்‌ பலிசெலுத்தினார்‌; ஏனென்றால்‌ அவர்‌ பாவமற்றவர்‌. எபி 4:15; எபி 7:26-28.

இயேசு ‘தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி’ விண்ணப்பம் பண்ணினதாக எபிரெயர்‌ சொல்கிறது. எபி 5:7. அது இரண்டாம்‌ மரணம்‌; அந்த மரணத்திவிருந்துதான்‌ இயேசுவை தேவன்‌ உயிர்த்தெழச்செய்து, அவரை இரட்சித்தார்‌. எபி 13:20. மேலும்‌ அவர்‌, ‘பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்‌’. எபி 5:8. கீழ்ப்படிதல்‌ இயேசுவுக்குப்‌ புதியது; அவர்‌ கீழ்ப்படிய விரும்பாதவர்‌ என்பதால்‌ அல்ல; அவர்‌ தேவன்‌ என்பதால்‌, அவர் பிர பஞ்சத்தின்‌ அரசர்‌; அதனால்‌ யாருக்கும்‌ கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை; மாறாக அனைவரும்‌ அவருக்குக்‌ கீழ்ப்படிந்தார்கள்‌.

இயேசுவின்‌ பாடுகளும்‌, அவரது சிலுவை மரணமும்‌ அவரது ஆசாரியத்துவஊழியத்தின்‌ இன்றியமையாத அங்கம்‌. ஒழுக்கத்தில்மேம்பட்டு, பூரணநிலையைஅடைவதற்காக இயேசு பாடுபடவில்லை, இரக்கத்தைக்‌ கற்றுக்கொள்ளவும்‌.அவர்‌ பாடுபடவில்லை, மாறாக, அவர்‌ இரக்கமூள்ளவர்‌ என்பதால்தான்‌, நம்‌மேல்‌ மனதுருகி, இந்தப் பூமிக்கு வந்தார்‌. எபி 2:17. இயேசு சகோதர சிதேகத்தைக்‌ காட்டியதும்‌, அவர்‌ மனிததன்மையைத்‌ தரித்ததும்‌, மனுக்குலத்தின்‌ பிரதிநிதியாக பிதாவின்‌ சித்தத்திற்கு முற்றிலும்‌ கீழ்ப்படிந்ததும்‌ சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை என்பதை அவருடைய பாடுகள்‌ வெளிப்படுத்தியதாக எபிரெயர்‌ சொல்‌கிறது. அவர்‌ ‘பூரணப்பட்டார்‌’ என்றால்‌, நம்‌ பிரதான ஆசாரியராகத்‌ தகுதிபெற்றார்‌. என்று அர்த்தம்‌. அவர்‌ முற்றிலும்‌ கீழ்ப்படிந்ததும்‌, சிலுவையில்‌ மரித்ததும்தான்‌ நம்‌ பிரதான ஆசாரியராக அவர்‌ செலுத்திய தேவனுக்கேற்ற விசேஷித்த பலியாகும்‌.

நாம்‌ ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்‌’. 1பேதுரு 2:9. இந்த விசேஷித்த பணியைப்‌ பெற்றிருப்பதால்‌, பிறமனிதர்களுடன்‌ எத்தகைய உறலைப்‌ பேண வேண்டுமென இயேசுவின்‌ வாழ்க்கை காட்டுகிறது?

மெல்கிசேதேக்கின்‌ முறைமையின்படி

  மெல்கிசேதேக்கு யார்‌? அவன்‌ எவ்வாறு இயேசுவுக்கு முன்னடையாளமாக இருக்‌கிறான்‌? ஆதி 14:18-20; எபி 7:1-3.

மெல்கிசேதேக்கு ஒரு ராஜா; ஆசாரியன்‌. அவன்‌ ஆபிரகாமிலும்‌ மேலானவன்‌: ஏனென்றால்‌ ஆபிரகாம்‌ அவனுக்கு தசமபாகம்‌ செலுத்தினான்‌. அதேபோல: இயேசுவும் ராஜாவும்‌ ஆசாசியருமாவார்‌. எபி 1:3. ஆனால்‌ மெல்கிசேதைக்கைப்‌ போல அல்லாமல்‌ இயேசு பாவமற்றவர்‌. எபி 7:26-28.

இயேசு ‘மெல்கிசேதேக்குக்கு ஒப்பான’ ஆசாரியர்‌. எபி 7:15. இதைத்தான்‌ எபிரெயர்‌ ‘மெல்கிசேதேக்கின்‌ முறைமையின்படியான’ ஆசாரியர்‌ என்று சொல்‌லுகிறது. எபி 5:6. இயேசு மெல்கிசேதேக்கின்‌ இடத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசாரியர்‌ அல்ல; மாறாக, அவளைப்போன்ற ஆசாரியத்துவத்தைப்‌ பெற்றவர்‌.

உதாரணமாக, மெல்கிசேதேக்கு தந்தையும்‌ தாயும்‌ வம்சவரலாறும்‌ பிறப்‌பும்‌ இறப்பும்‌ இல்லாதவன்‌ என்று பவுல்‌ சொல்கிறான்‌. ஆபிரகாமின்‌ காலத்தில்‌ இயேசு மனிதனாக அவதரித்து, மெல்கிசேதேக்காக வந்ததாக சிலர்‌ சொல்கிறார்‌கள்‌. ஆனால் இந்தக் கருத்தை எபிரெயர்‌ஆதரிக்கவில்லை. மெல்கிசேதேக்கு இயேசுவுக்கு ‘ஒப்பானவன்‌’ என்றால்‌, இயேசுவைவிட வித்தியாசமானவன்‌ என்று அர்த்தம். எபி 7:3.

மெல்கிசேதேக்கு ஒரு பரலோக ஜீலி என்றும்‌ சொல்கிறார்கள்‌. அந்தக்‌ கருத்‌தும்‌ எபிரெயரின்‌ கருத்துக்கு மூரணானதே. மெல்கிசேதேக்கு தகப்பனும்‌ தாயும்‌ ஆரம்பமும்‌ அல்லது முடிவும்‌ இல்லாதவன்‌ என்பதால்‌, அவனை தேவனென்று சொல்லலாமா? அப்படியிருக்க வாய்ப்பில்லை. மெல்கிசேதேக்கு தேவன்‌ என்‌றால்‌, அவன்‌ இயேசுவுக்கு முன்னரே பரலோகத்தில்‌, தெய்வீக ஆசாரியத்துவப்‌பணியைச் செய்து முடித்திருக்கவேண்டும்‌. ஆனால்‌ ‘வேறொரு ஆசாரியர்‌ எழும்ப. வேண்டுவதென்ன?’ என்று எபிரெயர்‌ கேள்வி எழுப்புகிறது. எபி 7:11.

எனவே மெல்கிகேதேக்கின்‌ தாய்‌, தகப்பன்‌, வம்சவரலாறுபற்றி வேதாகமம் ‌சொல்லாததால்‌, இயேசுவின்‌ ஆசாரிய ஊழியத்திற்கு ஓர்‌ அடையாளமாக, நிழலாக அவனனப்‌ பயன்படுத்துவது பவுலுக்கு எளிதாக இருக்கிறது. ஆதி 14:18-20. மேலும்‌, தேவன்‌ மட்டுமே நித்தியமானவர்‌ என்றும்‌ வெளிப்படுத்துகிறது. சுருக்கமாகச்சொன்னால்‌, மெல்கிசேதேக்கு என்பவர்‌ கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருந்த ஒரு கானானிய ராஜாவும்‌ ஆசாரியனுமாவான்‌.

‘உன்னதமான தேவனுடைய ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கின்மூலம்‌ கிறிஸ்து தாம்‌ பேசினார்‌. மெல்கிசேதேக்‌ கிறிஸ்து அல்ல; மாறாக உலகத்தில்‌ தேவனுடைய சத்தமாக இருந்தவன்‌; பிதாவின்‌ பிரதிநிதியாக இருந்தவன்‌. கடந்தகால: தலைமுறைகள்‌ முழுவதும்‌ கிறிஸ்து பேசியிருக்கிறார்‌; கிறிஸ்து தம்‌ மக்களை: வழிநடத்தியிருக்கிறார்‌; உலகத்திற்கு ஒளியாக இருந்திருக்கிறார்’.‌ 1

 1Ellen G. White, Selected Messages, book 1, p. 409. 

சத்தியத்தை அறிவிக்க ஊழியப்பணியாளர்கள்‌ இல்லாத இடங்களில்‌ தேவன்‌ செயல்படுகிறவிதம்‌ பற்றி மேல்கிசேதேக்குபற்றிய வெளிப்பாட்டிவிருந்து என்ன புரிகிறது?

செயல்திறமுள்ள ஆசாரியர்‌

‘இஸ்ரவேல்‌ ஜனங்கள்‌ லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்‌தல்லவோ நியாயப்பிரமாணத்தைப்‌ பெற்றார்கள்‌: அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் ‌உண்டாயிருக்குமானால்‌, ஆரோனுடைய முறைமையின்‌படி அழைக்கப்படாமல்‌, மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படிஅழைக்கப்‌பட்ட வேறொரு ஆசரியர்‌ எழும்ப வேண்டுவதென்ன?’ எபி 7:11.

ஆசாரியர்கள்‌ தேவனுக்கும்‌ மனிதனுக்கும்‌ இடையே மத்தியஸ்தர்கள்‌. ஆனாலும்‌ லேவிகோத்திர ஆசாரியர்கள்‌, நம்பிக்கையோடு தேவனண்டைக்குச்‌ செல்வதற்கான வழியை ஏற்படுத்தமுடியலில்லை; ஏனென்றால்‌ பூரணப்படுத்‌தலை உண்டாக்க முடியலில்லை. எபி 7:11, எபி 7:18,19. அவர்கள்தாமே பூரணர்களாக இல்லை. அப்படியானால்‌, மற்றவர்களை எவ்வாறு பூரணப்படுத்த முடியும்‌?                  

மிருகப்பலிகளும் பாவியின்‌ மனச்சாட்சியைச் சுத்திகரிக்க முடியவில்லை. மிருகப்பவிகளின்‌ நோக்கம்‌ இயேசுவின்‌ ஊழியத்தையும்‌, இயேசுவின்‌ பலியையும்‌ சுட்டிக்காட்டுவதே; இயேசுவின்‌ பலிமட்டுமே பாவத்திலிகுந்து மெய்யான. சுத்திகரிப்பை உண்டுபண்ண முடியும்‌. எபி 9:14; எபி 10:1-3, எபி 10:10-14, வேவிகோத்திர ஆசாரியர்களின்‌ ஊழியமும்‌ அவர்கள்‌ செலுத்தின பலிகளும்‌ தற்காலிகமானவை; எடுத்துக்காட்டாக இருந்தவை. அவர்கள்‌ ஊழியத்தின்மூலம்‌, இயேசுவின்‌ ஊழியம்பற்றி மக்கள்‌ அறிந்து, விசுவாசிக்கவேண்டுமென்று தேவன்‌ விரும்பினார்‌. அவரே, “உலகத்தின்‌ பாவத்தைச்‌ சுமந்துநீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி! யோவான்‌ 1:29.

நியாயப்பிரமாணத்தை மாற்றவேண்டிய அவசியம்‌ என்ன? எபி 7:11-16.

ஆசாரியத்துவத்தை மாற்றியதால்‌, நியாயப்பிரமாணத்தை மாற்றவேண்டியஅவசியம்‌ உண்டானதாக எபி 7:12 சொல்கிறது. ஏன்‌? ஏனென்றால்‌, ஆரோனுடையமு றைமையின்படி லேவி கோத்திரத்தைச்‌ சேராத எவனும்‌ ஆசாரியனாகப்‌ பணியாற்றக்‌ கூடாது என்கிற ஒறு திட்டமான கட்டளை இருந்தது. எண்‌ 3:10; எண்‌ 16:39,40. எபி 7:13,14 இயேசு யூதா கோத்திரத்தைச்‌ சேர்ந்தவர்‌; எனவே அவர்‌ லேவிகோத்‌திர ஆசாரியராக மாறுவதற்கு நியாயப்பிரமாணம்‌ தடைசெய்தது. எனவே, இயேசுவை ஆசாரியராக நியமிப்பதற்கு தேவன்‌ ஆசாரித்துவப்பிரமாணத்தை மாற்றிவிட்டதாகச்‌ சொல்கிறான்‌.                  

இயேசுவின்‌ வருகையும்கூட பலிமுறைப்‌ பிரமாணத்தில்‌ மாற்றத்தை ஏற்படுத்தியது. பாவிகள்‌ பாவநிவாரணத்திற்காக பல்வேறு பலிகளைக் கொண்டு வந்து செலுத்தினார்கள்‌. லேவி 1-7, ஆனால்‌ இப்போது இயேசுவே வந்து, பூரணமான பவியைத்‌ தந்து, புதிய உடன்படிக்கை செய்தார்‌; இரட்சிப்பின்‌ திட்டத்தை பூரணமாக வெளிப்படுத்தினார்‌; அதனால்‌ மிருகப்பலிகள்‌ ஒழிந்துபோயின. எபி 10:17,18.

முற்காலம்‌ முதற்கொண்டு கணக்கடங்கா மிருகப்பலிகள்‌ செலுத்தப்பட்டுள்ளன; அவை இயேசுவைச் சுட்டிக்காட்டின. ஆனாலும்‌ அந்தப்‌ பலிகளில்‌ எதுவும்‌ நம்‌ பாவங்களுக்கான விலையைச் செலுத்தமுடியவில்லை, இயேசுவின்‌ மரணம்மட்டுமே எங்வாறு அதற்கான விலையைச்‌ செலுத்த மடிந்தது?

நித்திய ஆசாரியர்‌

எதன்‌ அடிப்படையில்‌ இயேசு ஆசாரியரானார்‌? எபி 7:16.

 இயேசுவின்‌ ஊழியம் நித்தியமானது. அவர்‌ அழியா ஜீவனுள்ளவர்‌ என்பதன்‌ அடிப்படையில்‌ ஆசாரியத்துவத்தைப்‌ பெற்றார்‌. இந்த உண்மைகளில்‌: அடங்கியுள்ள பயன்கள்‌ மகத்தானவை. அதாவது இயேசுவின்‌ ஊழியத்தை மிஞ்சிய ஓர்‌ ஊழியமே இல்லை. இயேசு முற்றிலும்‌, நித்தியமாக, ‘முற்றுமுடிய’ இரட்சிக்கிறார்‌. எபி 7:25. இயேசு முடிவான, இறுதியான இரட்சிப்பை அருளுகிறார்‌. மனித தன்மையின்‌ உள்ளான அம்சங்களையும்‌ சுத்திகரிக்கிறார்‌. எபி 4:1‌2; எபி 9:14; எபி 10:1-4. தேவனுக்குமுன்‌ இயேசு பரிந்துபேசுவதால்‌, புதிய உடன்படிக்‌கையின் கீழ்‌ வழங்கப்பட்டுள்ள அனைத்தை நன்மைகளையும்‌ பெறலாம்‌.

பாவமன்னிப்பைக்‌ காட்டிலும்‌ அதிகநன்மைகளைப்‌ பெறலாம்‌. பிரமாணம்‌ நம் ‌இருதயங்களில்‌ எழுதப்படுகிறது: அவருக்குள்‌ நம்மைப்‌ புது சிறுஷ்டிகளாக மாற்றுகிறது; உலகத்திற்கு நற்செய்தியை அறிவிக்க நம்மை வழிநடத்துகிறது. எபி 8:10-12. இயேசு தேவனாகவும்‌, மனிதராகவும்‌ இருப்பதால்‌, பிதாவுக்குமுன்‌ நம்‌ பிரதிநிதியாக நிற்கிறார்‌. தம்‌ ஜீவனை நமக்காகப்‌ பலியிட்டதினால்‌, தேவனிடம்‌ நித்தியதயவைப்‌ பெற்றுக்கொடுத்திருக்கிறார்‌.

இயேசுவுக்கும்‌ புது உடன்படிக்கைக்கும்‌ இடையேயுள்ள தொடர்பு என்ன? எபி 7:22.

இயேசு புது உடன்படிக்கையின்‌ அச்சாரமாக இறக்கிறார்‌: ஏனென்றால்‌, அவர் ‌”என்றென்றைக்கும்‌’ ஆசாரியராயிருப்பதாக தேவன்‌ ஆணையிட்டார்‌. எபி 7:21. இந்த ஆணையின்‌ பொருள்‌ நமக்குப்‌ புரியாமல்‌ இருக்கலாம்‌. வனாந்தர: தலைமுறையினராக்கும்‌ ஆபிராகமுக்கும்‌ தேவன்‌ கொடுத்த ஆனைபற்றி பவுல்‌ ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறான்‌. எபி 3:7-11; எபி 6:13-15, அந்த ஆணைகளுக்‌கும் தேவன்‌ தம்‌ குமாரனைப் பற்றி இட்ட ஆணைக்கும்‌ வித்தியாசம்‌ என்னவென்‌றால்‌, அந்த ஆணைகள்‌ எல்லாம்‌ சாகும்‌ தன்மையுள்ள மளிதர்கள்‌ சம்பந்தப்பட்‌டவை. உயிரோடிருக்கும்‌ வரைக்கும்தாம்‌ அந்த ஆணைகள்‌ செல்லுபடியாகும்‌, ‘வனாந்தரத்‌ தலைமுறையினருக்கும்‌ ஆபிராகமுக்கும்‌ தேவன்‌ இட்ட ஆணைகள்‌ வனாந்தரத்‌ தலைமுறையினரும்‌, ஆபிரகாமின்‌ சந்ததியாறாம்‌ இருந்த வரைக்கும்‌தான்‌ செல்லுபடியாகின. கலா 3:29.

குமாரன்‌, ‘அழியா’ ஜீவனுள்ளவர்‌’. அவருக்கு தேவன்‌ இட்ட ஆனை, என்றென்றைக்கும்‌ உரியது. ஒருவருடைய பிணையாளியாக நிற்பவர்‌, அந்த ஒருவர்‌ ஏதாவது தண்டனைக்கு ஆளானால்‌, அதையும்‌ ஏற்றுக்கொள்ளவேண்டிய பொறுப்பாளியாக இருக்கிறார்‌; மரணதண்டனையும்‌ அதில்‌ அடங்கும்‌. ஆனால்‌ பிதா தாம்‌ கொடுத்த வாக்குறுதியில்‌ மாறப்போவதில்லை என்பதை உறுதிப்‌படுத்தும்‌ வகையில்‌ இயேசுவை நம்‌ பிணையாளியாக ஏற்படுத்தினார்‌. இயேசுவில்‌ நமக்கு அருளப்பட்டுள்ள இரட்சிப்பு அவ்வளவு உறுதியானது.

குற்றமற்ற ஆசாரியர்‌

எபி 7:26 இல்‌ சொல்லப்படும்‌ இயேசுவின்‌ ஐந்து குணநலன்கள்‌ யாவை?

இயேசு ‘பரிசுத்தர்’‌ அதாவது தேவனோடுள்ள உறவில்‌ குறையேதும்‌ இல்‌லாதவர்‌. எபி 2:18; எபி 4:15; எபி 5:7,8. தேவனோடும்‌ மற்றவர்களோடும்‌ உடன்படிக்கை உறவைப்‌ பராமரிக்கிறவரை இவ்வாறு அழைப்பதுண்டு; அதற்கான அதே கிரேக்க வார்த்தையை பழைய ஏற்பாட்டின்‌ பழைய கிரேக்க மொழிபெயர்ப்பும்‌ பயன்படுத்துகிறது.

இயேசு ‘மாசற்றவர்‌’. அவர்‌ ‘எல்லாவிதத்திலும்‌’ சோதிக்கப்பட்டும்‌, தூய்‌மையானவராக, கறைபடியாதவராக இருக்கிறார்‌. எபி 4:15; எபி 2:18. இயேசு முற்றிலும்‌ பாவமற்றவராக இருப்பதால்‌, மேலான ஆசாரியத்துவத்தைப்‌ பெற்றிருக்கிறார்‌. பழைய உடன்படிக்கையின்‌ நிபந்தனைப்படி ‘பழுதற்ற’ மிகுகங்களயே தமக்கேற்ற பவிகளாக தேவன்‌ அங்கீகரித்தார்‌. பார்க்கவும்‌: லேவி 1:3,10 போன்ற வசனங்கள்‌. இயேசு இப்பூமியில்‌ வாழ்ந்தபோது முற்றிலும்‌ கீழ்ப்படிந்தார்‌; அதவால்‌ தம்மை தேவனுக்கு பிரியமான பவியாகச்‌ செலுத்த முடிந்தது. எபி 9:14.

இயேசு பரமேறிச்‌ சென்றபோது, ‘பாவிகளிடமிருந்து விலகினார்‌’. விலகுதல்‌ என்பதற்கான கிரேக்க வினைச்சொல்‌ நிகழ்காலத்தில்‌ உள்ளது; எனவே அது குறிப்பிட்ட சமயத்தில்‌ நிகழ்ந்த சம்பவமாகும்‌. இயேசு இப்பூமியில்‌ வாழ்ந்தபோது பாவிகளின்‌ பகைக்கு ஆளானார்‌; ஆனால்‌ வெற்றிபெற்று, தேவனுடைய வலது பாரிசத்தில்‌ வீற்றிருக்கிறார்‌. எபி 12:2,3. இயேசு ‘பாவிகளுக்கு விலகினவர்‌’ என்‌றால்‌, அவர்‌ முற்றிலும்‌ பாவமற்றவர்‌ என்று அர்த்தம்‌. எபி 4:15.

இயேசு ‘வானங்களிலும்‌ உயர்ந்தவர்‌’ அதாவது, அனைத்திற்கும் மேலாக தேவன்‌ அவரை உயர்த்தினார; ஆகவே அவர்‌, தேவனோடு ஒருவராக இருக்‌கிறார்‌. சங்கீதத்தில்‌, தேவனைப்பற்றிதான்‌, ‘வாளங்களுக்கு மேலாக உயர்ந்தவர்‌’ என்று சொல்லப்படுகிறது. சங்‌ 57:5,11; சங்‌ 108:5.

இயேசு முற்றிலும்‌ மனிதர்‌; ஆனால்‌ நம்மைப்போல பாவத்தன்மையுள்ள மனிதரல்ல. எபி 2:14-16; எபி 4:15. இயேசு பூரணர்‌; அதாவது அவர் பாவமே செய்ததில்லை; நம்மைப்போல பாவத்தால்‌ கறைபடவுமில்லை.

அவர்முற்றிலும்‌ மனிதராகவும்‌ இருந்தாலும்‌, நம்முடைய முன்மாதிரியாகவும்‌ இருக்கிறார்‌. வாழ்க்கைப்‌ பந்தயத்தில்‌ எவ்வாறு ஓடவேண்டுமென நமக்குக்‌ காட்டுகிறார்‌. எபி 12:1-4. அவரே நாம்‌ பின்பற்றவேண்டிய முன்மாதிரி. 1பேதுரு 2:21-23. அவர்‌ ‘பரிசுத்தரும்‌, குற்றமற்றவரும்‌, மாசில்லாதவரும்‌, பாவிகளுக்கு விலகினவருமாக’ இருப்பதால்‌, அவர்‌ நம்‌ இரட்சகராக இருக்கிறார்‌; நாமும்‌ அவருடைய குணத்தைப்‌ பிரதிபலிக்க முடியும்‌. எபி 7:26.

இயேசு நம்மைப் போல ஓரு மனிதராக இருந்தாலும்‌, அவர்‌ பாவல்‌ செய்யவே இல்லை. இந்த மகத்துவ உண்மை ஏன்‌ எப்போதும்‌ நம்‌ தியானமாக இருக்க வேண்டும்‌? அப்படியானால்‌ அவர்‌ எவ்வளவு பரிசுத்தமூள்ளவராக இருக்க வேண்டும்‌! அவர்‌ பரிசுத்தம்‌ நம்‌ கணக்கில்‌ எண்ணப்படுகிறது என்கிற உண்மை இரட்சிப்பை நமக்கு எவ்வளவு நிச்சயமாக்கியிருக்கிறது?

மேலும்‌ படிக்க:

‘கிறிஸ்து பார்த்துக்கொண்டிருக்கிறார்‌. நம் பாரங்கள்‌, நம்‌ ஆபத்துக்கள்‌, நம்‌ கஷ்டங்‌கள்‌ அனைத்தையும்‌ அறிந்திருக்கிறார்‌. நம்சார்பாக எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்‌. அவர் பேதுருவுக்குச் செய்ததுபோல, ஒல்வோர்‌ ஆத்துமாவின் தேவைகளுக்கேற்ப பேசுகிறார். சோதிக்கப்பட்டடு களைத்த நிலையில் இருக்கிற தம் பிள்ளைகள் எல்லோரும் சாத்தானுடைய சோதனைகளை எதிர்த்து நிற்கும்படி நம்‌ வழக்கறிஞர்‌ அவர்களுக்கு எப்போதும்‌ போதித்துக்‌கொண்டிருக்கிறார்‌. எதிரியின்‌ ஒவ்வோர்‌ அசைவையும் குறித்து அவர்‌ எச்சரிக்கிறார்‌. என்னென்ன நடக்கவேண்டுமென அவர்‌ கட்டளையிடுகிறார்‌’1

‘தேவனையும்‌ மனிதனையும்‌ நித்தியமாகப்‌ பிரித்துவிட வேண்டும்‌ என்பது சாத்தானுடைய நோக்கம்‌. ஆனால்‌ கிறிஸ்துவுக்குள்‌ நாம்‌, விழுந்து போகாதவர்கள்‌ போலவே தேவனோடு மிகவும்‌ நெருங்கி ஐக்கியமாகிறோம்‌. இரட்சகர்‌ நம்‌ சாயலைத்‌ தரித்து, ஒருபோதும்‌ பிரிக்கமுடியாத பந்தத்தால்‌, மனுகுலத்தில்‌ தம்மை ஒருவராக்கினார்‌. தேவன்‌ தம்வார்த்தையை நிறைவேற்றுவார்‌ என்பதற்கு இதுதான்‌ உறுதிமொழி. ‘நமக்கு ஒரு பாலகன்‌ பிறந்தார்‌; நமக்கு ஒரு குமாரன்‌ கொடுக்கப்பட்டார்‌’. தேவன்‌ தம்குமாரனில்‌ மனித சாயலைத் தரித்தார்‌; அந்தச்‌ சாயலோடு தாமே பரலோகம்‌ சென்றார்‌. அதே ‘மனுஷகுமாரன்தாம்‌’ பிரபஞ்சத்தின்‌ அரசராக தேவனோடுவீற்றிருக்கிறார்‌. அதே மனுஷகுமாரனுடைய’ நாமம்தான்‌ ‘அதிசயமானவர்‌, ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன்‌, நித்திய பிதா, சமாதானப்பிரபு’ எனப்படும்‌. ஏசா 9:6. இருக்கிறவராகவே இருக்கிறேன்‌ என்பவர்தாம்‌ தேவனுக்கும்‌ மனிதனுக்கும்‌ இடையே நடுவராக, மத்தியஸ்தராக இருக்கிறார்‌. அவர்‌ ‘பரிசுத்தரும்‌, குற்றமற்றவரும்‌, மாசில்லாதவரும்‌, பாவிகளுக்கு விலகினவருமாக’ இருந்தும்‌, நம்மைச்‌ சகோதரரென்று அழைக்க வெட்கப்‌ படவில்லை. எபி 7:26; எபி 2:11. கிறிஸ்துவுக்குள்‌ பரலோகக்‌ குடும்பமும்‌ பூலோகக்‌ குடும்பமும்‌ ஒன்றாகச்‌ சேர்க்கப்பட்டுள்ளது. மகிமையடைந்த கிறிஸ்துவே நம்‌ சகோதரர்‌. பரலோகம்‌ மனித உருவில்‌ வந்தது; அளவில்லா அன்புள்ளவர்‌ மனுக்குலத்தை தம்மார்போடு சேர்த்து அணைத்‌துக்கொண்டார்‌’.2 

1 Ellen G. White, The SDA Bible Commentary, vol. 7, p. 931

2 Ellen G. White, The Desire of Ages, pp. 25, 26.

கலந்துரையாடக்‌ கேள்விகள்‌ 

1.      இயேசு “நம்‌ சார்பாக எப்போதும்‌ பேசிக்கொண்டிருக்கிறார்‌என்று எலன்‌ ஒய்ட்‌ சொல்கிறார்‌. அந்த வாக்குறுதியின்‌ அர்த்தம்‌ என்ன? தேவன்‌ நம்மேல்‌ வைத்த அன்புபற்றி அது போதிப்பது என்ன? இந்தக்‌ கருத்து ஏன்‌ ஆறுதலான ஒன்று? நமக்காக ஒருவர்‌ வாதாடவேண்டியது ஏன்‌ முக்கியம்‌ ?

2.      ‘ஆனால்‌ கிறிஸ்துவுக்குள்‌ நாம்‌, விழுந்துபோகாதவர்கள்‌ போலவே தேவனோடு மிகவும்‌ நெருங்கி ஐக்கியமாகிறோம்‌என்று எலன்‌ ஒய்ட்‌ சொல்கிறார்‌. அதன்‌ அர்த்தம்‌ என்ன? அந்த நெருக்கத்தை நாம்‌ எவ்வாறு அனுபவிக்கலாம்‌ ? அந்த அனுபவத்திலிருந்து எத்தகைய ஆறுதலைப்‌ பெறலாம்‌? அந்த நெருக்கம்பற்றியும்‌, அதை அனுபவிக்கிற அனுபவம்பற்றியும்‌ வகுப்பில்‌ கலந்தாலோசியுங்கள்‌. ‘நமக்காக அவர்‌ வாதாடுவது’ அந்த அனுபவத்தைப்‌ பெற எவ்வாறு உதவுகிறது?